Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிலிருந்து 8,278 கோடி ரூபாய் வெளியேறியது

நடப்பு நவம்பர் மாதத்தில் இதுவரை 8,278 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

நவம்பர் 2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 5,713 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,565 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது.

ஆக ஒட்டுமொத்தமாக 8,278 கோடி (1.26 பில்லியன் டாலர்) அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்திய சந்தைகளில் மந்தமான காலாண்டு வருவாய் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த சாத்தியமான சூழ்நிலை நிலவுவதால் 8,278 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ