Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

74 கோடியை நெருங்கியது ஜிஎஸ்எம் எண்ணிக்கை

நம் நாட்டில் ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 74 கோடியை நெருங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 63 லட்சம் அதிகரித்து, 73.31 கோடியிலிருந்து 73.94 கோடியாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 32.18 சதவிகித சந்தை பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதன் வாடிக்கையாளர்கள் 23.79 கோடியாக அதிகரித்துள்ளனர். தொடர்ந்து 18.94 கோடி வாடிக்கையாளர்களுடன் வோடஃபோன் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ