Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட் வாட்ச் களமிறங்கியது டைட்டன்

எச்பி நிறுவனத்துடன் இணைந்து புதிய ரக ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விற்பனை செய்ய உள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்பி உடன்  டைட்டன் நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக டைட்டன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ரக ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவற்றின் விற்பனை தொடங்கப்படும்.

ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வெறும் நேரம் காட்டும் கருவி மட்டுமல்ல. தகவல் தொடர்பு சாதனங்களாகவும் இந்த கைக்கடிகாரங்கள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP