Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மைசூர் சாண்டல் சோப்பு தொழிற்சாலை மூடப்பட்டது!

சந்தன மரம் பற்றாக்குறையால் மைசூரில் இயங்கிவரும் மைசூர் சாண்டல் சோப்பு தொழிற்சாலையை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவில் சந்தன மரம் அதிகம் வளரும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இந்த மாநிலத்தில் சந்தன எண்ணெய், சோப்பு போன்ற பல பொருட்களை கர்நாடக சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்ட்கள் லிமிடெட் (KSDL) என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இது கர்நாடக அரசின் சொந்த நிறுவனமாகும்.

இந்த நிலையில் சந்தன மரம் பற்றாக்குறையால் மைசூரில் இயங்கிவரும் KSDL தொழிற்சாலையை வரும் ஏப்ரல் மாதம் வரை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக சந்தன எண்ணெய், சோப்பு தயாரித்து வரும் KSDL நிறுவனம் அடுத்த ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close