Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

32,000 கோடி வணிகம்! தோகா வங்கி திட்டம்

இந்தியாவில் தோகா வங்கியின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் 32,500 கோடி ரூபாயாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வங்கியாகச் செயல்படுவதற்கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடந்த ஆண்டு பெற்றோம். அதையடுத்து, மும்பையில் தோஹா வங்கியின் முதல் கிளை அமைக்கப்பட்டது.

இந்தியாவின் மக்கள் தொகை, வணிக வாய்ப்புகளைக் கணக்கிடும்போது, இங்கு  வங்கிகள் குறைவாகவே உள்ளன. தமிழகம், கர்நாடகா, கேரளா,  ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் தோகா வங்கியின் கிளைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது இந்தியாவில் தோகா வங்கியின் வணிகம் ரூ. 15,000 கோடியாக உள்ளது. இதை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 32,500 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ