Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஏற்றுமதி 300 பில்லியன் டாலராக குறையும்! வர்த்தகத்துறை அதிகாரி தகவல்

நம் நாட்டின் ஏற்றுமதி 300 பில்லியன் டாலராக குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகத்துறை இணை செயலாளர் ரவி கபூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 340 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 312 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது.


இப்போது, நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் 325 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் 300 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு ஏற்றுமதி எட்டினாலே மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால், இதைவிட குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலக பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ