Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனுமதி இல்லாமல் நூடுல்ஸ் தயாரிப்பு 'பதஞ்சலி'-க்கு நோட்டீஸ்

யோகா குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


பாபா ராம் தேவ் தனது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ஆட்டா நூடுல்ஸை சமீபத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உடனடி நூடுல்ஸ் தயாரிப்புக்கு எங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று உணவு பாதுகாப்பு அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை நேற்று பெற்றுக்கொண்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ