Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசலை மட்டும் செலுத்தத் தயார், வட்டியை செலுத்த முடியாது! விஜய் மல்லையா தடாலடி

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா நிலுவையில் உள்ள கடனில் அசலை மட்டும் திருப்பி செலுத்தத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் கடனில் அசலை மட்டும் செலுத்தத் தயார், வட்டியை செலுத்த முடியாது என வங்கிகளிடம் மல்லையா தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடன் நிலுவை குறித்து வங்கிகளுடன் பேசி வருவதாகவும், இன்னும் அடுத்த சில தினங்களில் இது நடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய அசல் தொகை மட்டும் 4,500 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் இடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ