Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சா எண்ணெய் விலை சரிவால், செலவு குறையும்! பெட்ரோலிய அமைச்சகம் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 35 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 189.43 மில்லியன் டன் கச்சா எண்ணெய் 1,12,744 பில்லியன் டாலர் (ரூ.6.87 லட்சம் கோடி) அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது, நடப்பு நிதி ஆண்டில் அதன் இறக்குமதி 188.23 மில்லியன் டன்னாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் மூலம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அதன் செலவு 6.87 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 4.73 லட்சம் கோடி ரூபாயாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 35 சதவிகிதம் குறையும் என்று பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ