Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஞ்சம், ஊழல், மோசடி இந்திய நிறுவனங்கள் முன்னணி!

உலக அளவில் லஞ்சம், ஊழல், மோசடி நடைபெறுவதில் அதிக அளவில் மோசடிகள் இந்திய நிறுவனங்களில் நடப்பதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் மோசடிகளை குறித்து க்ரால் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு உலகம் முழுவதும் 2015 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில்  700க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் 25 சதவிகிதம், ஒழுங்குமுறை அமைப்புகளை மீறுதல் 20 சதவிகிதம், ஐபி திருட்டு 15 சதவிகிதம் மற்றும் பணமோசடி 7.5 சதவிகிதம் நடைபெறுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 24 சதவிகிதம் பேர் பதிலளித்து இருந்தனர். இந்தியாவில் இருந்து 40 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக க்ரால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ