Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி15 நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு..!

 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிறிய நகரங்களின் (B15) பங்களிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது என ஆம்ஃபி தெரிவித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை டி 15
9(T15) நகரங்கள்தான் எப்போதும் முன்னிலையில் இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. 
2014 அக்டோபர் மாதத்தில் சிறிய நகரங்களின் முதலீடு ரூ. 1.72 லட்சம் கோடியாக இருந்தது. அது 2015 அக்டோபர் மாதத்தில் ரூ. 2.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
 
கடந்த ஓராண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்  துறையின் வளர்ச்சி 24 சதவிகிதம். இந்தக் கால கட்டத்தில் சிறிய நகரங்களில்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வளர்ச்சி மொத்த வளர்ச்சியில் 23 சதவிகிதமாக உள்ளது.  ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் பி15 நகரங்களின் முதலீடு 51%, டி15 நகரங்களின் முதலீடு 29% ஆக உள்ளது
  
முதலீடு அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது, விளம்பரங்கள் செய்வது, பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதுவது போன்றவற்றினால் முதலீடு  அதிகரித்துள்ளது.  அதுமட்டும் இல்லாமல் பி15 நகரங்களில் விற்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு அதிக கமிஷன் வழங்கப்படுகிறது. இது டி15 நகரங்களில் கமிஷன் 1 சதவிகிதமாக உள்ளது. 
 
டி15 மற்றும் பி15 நகரங்கள் என்றால் என்ன?
டி15(Top 15 cities)  நகரங்கள் என்பது வளர்ச்சி அடைந்த பெரு நகரங்கள். அதாவது அகமதாபாத், பெங்களூர் , பரோடா, சண்டிகர், சென்னை,ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ,(தானே & நவி மும்பை உட்பட) மும்பை,( என்.சி.ஆர் உட்பட).   தமிழகத்தில் சென்னையை தவிர பிற நகரங்கள் அனைத்துமே பி15(Beyond 15 cities)  நகரங்கள் ஆகும்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP