Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த வருஷம் 11 சதவிகிதம் இன்கிரிமென்ட்!!!!

இந்திய ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் 10.8 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று டவர்ஸ் வாட்சன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015-16 ஆசிய-பசிபிக் சம்பளம் பட்ஜெட் திட்டமிடல் குறித்து டவர்ஸ் வாட்சன் எனும் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் 6.1 சதவிகிதமாக இருந்த போதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த உத்தேச சம்பள உயர்வு 10.8 சதவிகிதம் வரை இருக்கும் என்று டவர்ஸ் வாட்சன் தெரிவித்துள்ளது.

இந்திய ஊழியர்களில் சிறந்த ஊழியர்களுக்கு சராசரியாக 12.5 சதவிகிதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும், நடுத்தர மற்றும் நடுத்தரத்துக்கும் மேலே உள்ள ஊழியர்களுக்கு 9.7 மற்றும் 11 சதவிகிதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் டவர்ஸ் வாட்சன் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ