Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிடிஎஸ்எல்-ல் உள்ள பிஎஸ்இ-ன் பங்குகளை எல்ஐசி வாங்க இருக்கிறதே என்ன விஷயம்?


பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான செபி, சிடிஎஸ்எல் மற்றும் என்எஸ்டிஎல் போன்ற டெபாசிட்டரி நிறுவனங்களின் பங்குகளை, பங்குச் சந்தைகள் 24 சதவிகிதத்திற்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று  ஏப்ரல் 2, 2012 அன்று அறிவித்து, மூன்று ஆண்டு கால அவகாசமும் வழங்கி இருந்தது.

அந்த கால அவகாசம் முடிந்திருக்கும் நிலையில் செபியின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக  பிஎஸ்இ-ன் துணை நிறுவனமான சிடிஎஸ்எல்  டெபாசிட்டரி நிறுவனத்தில் உள்ள பிஎஸ்இ-ன் 10 சதவிகித பங்கை எல்ஐசி நிறுவனம் வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதை ஒட்டி   ரூ.800 - 850 கோடி கைமாறும். 

பிஎஸ்இ பங்குச் சந்தை சிடிஎஸ்எல்-ல் 54.2 சதவிகிதமும், என்எஸ்இ பங்குச் சந்தை,  என் எஸ்டிஎல்லில் 25.045 சதவிகித பங்குகளையும் வைத்திருக்கிறார்கள். மார்ச் 2015 கணக்குப் படி கடந்த நிதி ஆண்டில் என்எஸ்டிஎல் 52 கோடி ரூபாயும், சிடிஎஸ்எல் 43 கோடி ரூபாயும் நிகர லாபமாக ஈட்டி இருக்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ