Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு வீடு 160 கோடிக்கு விற்பனை!

இந்தியாவிலேயே  முதன் முறையாக மும்பையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு வீடு 160 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது.

லோதா பில்டர்கள் தென் மும்பையில் அல்ட்டாமவுன்ட் ரோட்டில் 40 மாடி கொண்ட சொகுசு கட்டிடத்தை கட்டி வருகின்றனர். இந்த  கட்டிடம் 24வது மாடி வரை கட்டப்பட்டுள்ளது. முழுவதுமாக கட்டி முடிக்க இன்னும் 18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கட்டிடத்தின் 34வது மற்றும் 35வது மாடிகள் அடங்கிய 10,000 சதுர அடி கொண்ட வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் 160 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

இந்த கட்டிடம் முகேஷ் அம்பானியின்  சொகுசு வீடான அன்டில்லா டவர் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ