Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின் தேவையைப் பூர்த்தி செய்ய 9 லட்சம் கோடி வேண்டும்! எனர்ஜி ஏஜென்சி தகவல்

நம் நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.9 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுவதாக இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மின் தேவை, முதலீடு குறித்து 'இந்தியா எனர்ஜி அவுட்லுக் 2015' என்ற பெயரில் இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி (ஐஇஏ) எனும் அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2040-ம் ஆண்டிற்குள் நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய 140 பில்லியன் டாலர் அதாவது ரூ.9 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் தேவைப்படும். இதில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி மின் விநியோகத்துக்கும், மின் ஆற்றல் திறனை மேம்படுத்த ரூ.2 லட்சம் கோடியும் தேவைப்படும் என்று ஐஇஏ நிர்வாக இயக்குனர் ஃபெய்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மூன்று விஷயங்கள் மிகவும் முதன்மையாக கருதப்படுகிறது. முதலீடு, முதலீடு, முதலீடு இந்த மூன்று விஷயமும் இப்போது இந்தியாவின் பிராதானத் தேவையாக உள்ளதாக அவர் கூறியிள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close