Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கோடி எல்இடி பல்புகள் விநியோகித்து அரசு சாதனை!

எல்இடி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் 1 கோடி எல்இடி பல்புகளை விநியோகித்து ஆந்திரப் பிரதேச மாநில அரசு சாதனைப் படைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் எல்இடி பல்புகளை பயன்படுத்துமாறு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. எல்இடி (ஒளி உமிழும் டையோடு) தொழில்நுட்பம் நம்முடைய மின் கட்டணத்தை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் உள்ளதால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 1 கோடி எல்இடி பல்புகளை ஆந்திரப் பிரதேச அரசு விநியோகித்து சாதனை படைத்துள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு வருடத்திற்குள் ஒரு கோடி எல்இடி பல்புகளை கடந்து சாதனை படைத்துள்ள ஆந்திர மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை மத்திய அரசு 3.15 கோடி எல்இடி பல்புகளை விநியோகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close