Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 கோடி எல்இடி பல்புகள் மத்திய அரசு ஆர்டர்!

அடுத்த 10 நாட்களுக்குள் 5 கோடி எல்இடி பல்புகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டின் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால், மின்சார உற்பத்தி மற்றும் அதன் செலவினத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இப்போது, எல்இடி பல்புகளின் பயன்பாட்டினால் அதிகளவிலான மின்சாரச்தை சேமிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

தற்போது சந்தையில் சிஎப்எல் பல்புகளின் விலை 130 முதல் 215 ரூபாய் வரையில் உள்ளது. எல்இடி பல்புகளின் விலை 160 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிஎப்எல், எல்இடி பல்புகளின் விலை வித்தியாசம் காரணமாக எல்இடி பல்புகளின் விற்பனை மந்தமாக உள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு 5 கோடி எல்இடி பல்புகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.

இதனால் சந்தையில் எல்இடி பல்புகளின் விலை 20 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ