Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் தான் அதிக எஸ்.இ.இசட்! மத்திய அரசு தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.இ.இசட்) செயல்பட்டு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (30.11.15) பார்லிமென்டில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 204 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதில் தமிகழகத்தில் மட்டும் 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தப்படியாக தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் 26 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நாட்டின் முக்கிய ஏற்றுமதி மையங்களாக உள்ளதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 25 சதவிகிதம் தனது பங்களிப்பினை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் செயல்படும் மொத்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 15,04,597 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close