Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி இன்று (1.12.15) தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று நிதிக் கொள்கை மீதான மறுஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டி விகிதம், பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு, கச்சா எண்ணெய் விலை உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் 0.50 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டது.

இப்போது ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வர்த்தக வங்கிகள் பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்)  7.25 சதவிகிதத்திலிருந்து 6.75 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ