Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப.சிதம்பரம் மகன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (1.12.15) அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை முதலே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனம் மூலமாக ஏர்செல் நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் நடந்ததாக தகவல் உள்ளதாகவும், 2006-ம் ஆண்டில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

 வாசன் ஐ கேர், அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங் நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

எனினும் இந்த ரெய்டுக்கான காரணம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ