Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் தவிக்கும் உறவினர்கள் பற்றி அறிய வோடஃபோன் புதிய சேவை!

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள உறவினர்கள், நண்பர்கள் நிலை பற்றி தெரிந்து கொள்ள வோடஃபோன் நிறுவனம் புதிய சேவையை வழங்கி வருகிறது.

சென்னையில் பெய்த கனமழையால் புறநகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் இணைப்பு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து என எந்தவித வசதிகளும் இல்லை. வெள்ளத்தில் சிக்கியுள்ள சொந்த, பந்தங்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பலரும் அல்லாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு உதவ வோடஃபோன் நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னை வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் தமிழகத்தில் வசிப்பவர்கள் உங்களின் வோடபோன் எண்ணில் இருந்து அவசர உதவி எண்ணான 1948க்கு போன் செய்தால் மாயமானவர்கள் கடைசியாக எந்த இடத்தில் இருந்து போன் பேசினார்கள் என்ற தகவல் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் போன் செய்த 2 மணிநேரத்திற்குள் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
சொந்த, பந்தங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த சேவையை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ