Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.15 ஆயிரம் கோடி!

தமிழகத்தில் பெய்துள்ள கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (அசோசேம்)மதிப்பீடு செய்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் அதைத் தொடர்ந்த வெள்ளம் காரணமாக பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக அசோசேம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ரவாத் தெரிவித்துள்ளார்.

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள், ஐடிஇஎஸ், ஜவுளித் தொழில், சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் பெருமழையால் முடங்கி யுள்ளன.

இவை தவிர மேலும் சில தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெய்துள்ள கன மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும். நகர்மயமாதல் மற்றும் திட்டமிடாத வளர்ச்சி ஆகியனதான் இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ