Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மக்களுக்கு ஒரு வாரம் கட்டணம் இலவசம்! பிஎஸ்என்எல் தகவல்

கனமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சென்னை மக்களுக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் அழைக்கும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

இந்த சேவையை முற்றிலும் இலவசமாக டிசம்பர் 7-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள், பின்னர் செலுத்தலாம்.

இதற்காக எந்த அபராத கட்டணமோ, சேவை துண்டிப்போ செய்யப்பட மாட்டாது. இது செல்போன் மற்றும் லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

 


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ