Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு! இன்று இரவுக்குள் சீராகும்

சென்னையில் பெய்த  வரலாறு காணாத கனமழையால்  மின்சாரம், பால், குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. சில பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே திறந்து இருக்கின்றன. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று (4.12.15) இரவுக்குள் சீராகும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. பங்குகளில் பெட்ரோல், டீசலை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ