Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கனமழை: வீட்டுக்கடன் அபராதம் ரத்து! ஹெச்.டி.எப்.சி அறிவிப்பு

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெச்.டி.எப்.சி வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கடனுக்கான தவணையை தாமதமாக செலுத்தினால் வசூலிக்கப்படும் அபராதத்தை நவம்பர் மாதத்திற்கு ரத்து செய்துள்ளது.

வெள்ளத்தால் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை நிவர்த்தி செய்ய குயிக் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன்களையும் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த வகை கடன்கள் அனைத்திற்கும் எவ்வித பிராசசிங் கட்டணங்களும் கிடையாது என்று ஹெச்.டி.எப்.சி தெரிவித்துள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ