Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 நிறுவனங்கள் நிதி திரட்ட செபி தடை!

முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட 2 நிறுவனங்களுக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிரடியாக தடை விதித்துள்ளது.

அர் கவா என்டர்பிரைசஸ், சுவாபூமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் மீட்கக்கூடிய முன்னிரிமை பங்குகளை (ஆர்.பி.எஸ்) முறையே 344 மற்றும் 141 பேருக்கு வெளியிட்டு நிதி திரட்டின.

50-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பங்கு வெளியிட்டு நிதி திரட்டியதால் இந்த நிறுவனங்கள் கட்டாயம் பங்க்குச்சந்தையில் பட்டியலிப்பட வேண்டும். ஆனால், இந்த நிறுவனங்கள் இதனை மேற்கொள்ள தவறிவிட்டன.

இதனையடுத்து முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட இந்த 2 நிறுவனங்களுக்கும் செபி அதிரடியாக தடை விதித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ