Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சிறப்புக் கடனுதவி : எஸ்பிஐ அறிவிப்பு

நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , தமிழகத்தில் வெள்ளம் பாதித்த  பகுதிகளில் சிறப்புக் கடனுதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

வீடு, வாகனப் பழுதுகளுக்காக தங்க அடமானக் கடன், சம்பள முன்பணக் கடன் ஆகிய சிறப்புக் கடன்கள் விரைவாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

எஸ்பிஐ லைஃப் மற்றும் எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய காப்பீட்டுப் பிரிவுகளில் எடுக்கப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கேட்பவர்களுக்கு விரைந்து பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ