Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைவாசிகளுக்கு வீட்டுக்கடன் அபராதம் ரத்து! டிஹெச்எப்எல் தகவல்

வீடு கட்டுவதற்குக் கடன் வழங்கும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (டிஹெச்எப்எல்) நிறுவனம் சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கடனுக்கான தவணையை தாமதமாக செலுத்தினால் அதற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை நவம்பர் மாதத்திற்கு ரத்து செய்துள்ளது.

நவம்பர் மாதம் செலுத்த வேண்டிய தவணையை வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் நீட்டிப்பு செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ