Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎப் வட்டி விகிதம் 8.75%-ல் தொடர வேண்டும்! நிதி அமைச்சகம் விருப்பம்

நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதம் தற்போது உள்ள 8.75 சதவிகிதத்திலே தொடர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் விரும்புகிறது.

பிஎப் மீதான வட்டியை பிஎப் அறங்காவலர் குழு தன்னிச்சையாக முடிவு செய்யலாம். தன்னுடைய முதலீடுகளின் மீதான வருமானத்தை பொறுத்து இந்த குழு வட்டியை நிர்ணயம் செய்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக (2031-14, 2014-15) பிஎப் வட்டி விகிதம் 8.75 சதவிகிதமாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டிலும் (2015-16) இதே வட்டி விகிதம் தொடர வேண்டும் என்று நிதி அமைச்சகம் விரும்புகிறது.

வரும் 9-ம் தேதி நடக்க இருக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ