Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரியை உடனடியாக திருப்பி அளிங்க! மத்திய அரசு உத்தரவு

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று மத்திய அரசு, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, கூடுதலாக வரிப் பிடித்தம் செய்த வகையில், 2013-14 வரி ஆய்வு ஆண்டில் ரூ. 659 கோடியும், 2014-15 வரி ஆய்வு ஆண்டில் ரூ. 4,837 கோடியும் வருமான வரி கணக்குதாரர்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் கூடுதலாக வருமான வரி செலுத்தியோருக்கு அதனை விரைவில் திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close