Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காப்பீட்டு திட்டத் தகவலுக்கு தனி வலைத்தளம்

நம் நாடு முழுவதும் 35 ஆயிரம் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு தனி வலைத்தளம் ஒன்றை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இரிடா உருவாக்கியுள்ள காப்பீட்டு தகவல் பிரிவில் 35 ஆயிரம் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன.

இந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ சேவை வசதி, செலவீனம், இழப்பீடு கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'ரோகினி' வலைத்தளத்தில் பெறலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ