Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஞ்சத்தை நியாயப்படுத்தும் 66% இந்தியர்கள்!

 உலக அளவில் காரியத்தை சாதித்து கொள்ள லஞ்ச நடைமுறைகளில் குரோஷியா மற்றும் கென்யா நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.  இதில்  இந்தியா 3வது இடத்தில் இருப்பதாக எர்னஸ்ட் அண்ட் யங் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு ஆயிரத்துக்கும் அதிகமான நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்தவர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் லஞ்ச நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இது குறித்த பதிலளித்தவர்களில் 66 சதவிகிதம் பேர், தனிப்பட்ட முறையில் வழங்கும் பரிசு அல்லது ரொக்கமாக வழங்கும் பணம் அல்லது வணிகத்தை தக்கவைத்து கொள்ள இதுபோன்ற லஞ்ச நடைமுறைகள் நியாயமானதுதான் என்று பதிலளித்துள்ளதாக எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ