Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையிலிருந்து எஸ்ஸார் ஆயில் விலகுகிறது!

தனியார் துறை எண்ணெய் நிறுவனங்களிடையே 2-ம் இடத்தில் உள்ள எஸ்ஸார் ஆயில் பங்கு சந்தையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினம் மற்றும் விரிவாக்கத் திட்ட முதலீட்டிற்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்த, பங்குகள் திரும்ப பெறப்பட உள்ளதாகவும், இந்த நடவடிக்கை டிச.15-ம் தேதி துவங்கி டிச.21-ல் நிறைவடையும் என்று எஸ்ஸார் ஆயில் தெரிவித்துள்ளது.

பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில், பங்கு ஒன்றின் ஆதார விலை ரூ.146.05 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று எஸ்ஸார் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ