Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனமழையால் ராயல் என்ஃபீல்டு உற்பத்தி பாதிப்பு!

சென்னையில் பெய்த கனமழையால் 11,200 ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சென்னையில் திருவொற்றியூர் மற்றும் ஒரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் ஆலைகள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அந்த ஆலைகளில் உற்பத்தி திங்கள்கிழமை துவங்கியுள்ளது.
எனினும் பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னும் பணிக்கு வராதது மற்றும் போதுமான வாகன உதிரி பாகங்கள் சப்ளை இல்லாதது போன்ற காரணங்களால் மோட்டார் சைக்கிள் உற்பத்தி 50 சதவிகித அளவிற்கே உள்ளது.

டிசம்பர் 6-ம் தேதி வரை ஆலைகள் மூடப்பட்டதால் மொத்தம், 11,200 உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ