Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு ரூ. 6,60,000 கோடியைத் தாண்டும்! ஃபிக்கி தகவல்

நம் நாட்டில் இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 6,60,000 கோடியைத் தாண்டும் என்று ஃபிக்கி தெரிவித்துள்ளது.

ஃபிக்கி மற்றும் கன்சல்டன்சி நிறுவனமான கேபிஎம்ஜி இ-காமர்ஸ் சந்தை குறித்து ஆய்வு நடத்தி முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது சீனாவில் இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு  45,000 கோடி டாலரை (ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் கோடி) எட்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 1,000 கோடி டாலர் அதாவது ரூ. 66,000 கோடியை மட்டுமே எட்டியுள்ளது.

இந்த நிலையில் கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு அதிகரிப்பு, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு ரூ.6,60,000 கோடியைத் தாண்டும் என்று ஃபிக்கி தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP