Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஐடி சேவைகள் ஏற்றுமதி அதிகரிப்பு!

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் சேவைகள் துறையின் ஏற்றுமதி 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் மற்றும் பிபிஓ சேவைகள் ஆகியவற்றின்  மொத்த ஏற்றுமதி 2014-15-ல் 14.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.5.01 லட்சம் கோடியாக (82 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது.

இதில் கணினி சேவைகள் 72%-ம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் மற்றும் பிபிஓ சேவைகள் 28%-ம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP