Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியிருப்புகள் விலை 20 சதவிகிதம் சரிவு!

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குடியிருப்புகள் விலை 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தற்போதைய நிலைமை குறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கம் ஆய்வு நடத்தி தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அதில் பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் துறையில் பெரும்பாலான திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 25 முதல் 30 சதவிகித கட்டுமானங்கள் விற்பனையாகாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் வரி அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். திட்ட ஒப்புதலுக்கு ஒற்றை சாளர முறையை பின்பற்ற வேண்டும் என்று ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ