Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4.72 லட்சம் டன் கோதுமை இறக்குமதி! அரசு தகவல்

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் 4,72,192 டன் கோதுமையை வர்த்தகர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் கோதுமை மீதான இறக்குமதி வரி அக்டோபர் 19-ம் தேதியில் இருந்து 25%உயர்த்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் போதுமான அளவு கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 7 மாதங்களில் 4,72,192 டன் கோதுமையை வர்த்தகர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இதற்கு காரணம் வெளிநாடுகளில் கோதுமை விலை குறைவாக இருப்பதால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ