Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வயதுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட்.. !

மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுக்குறதுல முக்கியமான விஷயம் வயசு. வயசுக்கேத்த மாதிரி ஃபண்டைத் தேர்ந்தெடுக்குறதுதான் முதல் நுணுக்கம். இதுக்கும் கூட ஒரு ஃபார்முலா இருக்கு. ரொம்ப சிம்பிளான சூத்திரம்தான்.

முழுவதும் பங்கு சார்ந்த திட்டங்கள்ல வருமானமும் அதிகம், ரிஸ்க்கும் அதிகம்னு முன்னாடியே பார்த்தோம். இதுல ஒருத்தர் பணத்தைப் போட விரும்புறார்னு வைங்க.. அவர் தன்னோட சேமிப்புத் தொகையில எவ்வளவு போடலாம்..?

அவரோட வயசு எத்தனையோ, அதை 100-லிருந்து கழிச்சுக்கணும். வர்ற நம்பர் எத்தனையோ அத்தனை சதவிகிதம்தான், அவர் முழுவதும் பங்கு சார்ந்த திட்டங்கள்ல முதலீடு செய்யறதுக்கான அளவு.

மீதியை கடன் மற்றும் பங்கு சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்டுகள்ல முதலீடு செய்யலாம். இந்தக் கணக்குல 5- முதல் 10% வேறுபட்டா பெரிய தப்பில்லை. அதேமாதிரி 5 வருஷத்துக்கு ஒருமுறை இந்த முதலீட்டு முறையை மாத்திக்கிறது நல்லது.

நம்ம முருகன் கதையையே உதாரணமா எடுத்துக்கலாம். முருகனுக்கு வயசு 25. அப்படின்னா தன்னோட சேமிப்புல 75% (100-25 = 75) தொகையை முழுவதும் பங்கு சார்ந்த திட்டங்கள்லயும், மீதி 25% பேலன்ஸ்ட் ஃபண்டுகள்லயும் முதலீடு செய்யலாம்.

(நாணயம் எல்.கே.ஜி. இதழ்)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close