Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் தங்கத் திட்டத்தில் சித்தி விநாயக்!

வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் இருக்கும் தங்கத்தை பெற்று, அதற்கு வருமானம் தரும் திட்டத்தை மோடி அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.
 
 
ஆரம்பத்தில் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இப்போது இந்தத் திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. மும்பையில் உள்ள சித்தி விநாயக் ஆலயம் 40 கிலோ தங்கத்தை இந்த திட்டத்தின் கீழ் வங்கியிடம் ஒப்படைக்கலாமே என்று யோசித்து வருகிறது.
 
இந்த கோயிலில் மொத்தம் 160 கிலோ தங்கம் இருக்கிறது. சித்தி விநாயக் ஆலயத்தின் அறங்காவலர் குழு இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், பிற கோயில்களும் இதனைப் பின்பற்ற வாய்ப்புண்டு!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ