Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழியர்களுக்கு ஒரு லட்சம் கடன்; டிசிஎஸ் 1,100 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்க டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் பல்வேறுமட்ட பணியாளர்களுக்கு உதவிடவும், பல கட்ட நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த நிரந்தர பணியாளர்களுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் அதிகபட்சமாக அவர்களது 3 மாத சம்பளத் தொகை வரை வட்டியில்லாத நீண்டகாலக் கடனாக தர டிசிஎஸ் நிர்வாகம் முன்வந்துள்ளது.


இதுதவிர, பாதிப்புக்கு உள்ளான கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தரமான குடிநீர் பெறும் வசதிக்கு ஏற்பாடு செய்து தரப் போவதாகவும், முறையான கணக்கெடுப்புக்குப் பின் தேவையான நிரந்தர வசதிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

இதற்காக உத்தேசமாக 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close