Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாவதில் இந்தியா 3வது இடம்!

உலக அளவில் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்திய தொழில்நுட்ப துறை கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது. இணையத்தின் இணைப்பால் இந்தியர்கள் முன்னேற்றம் அடைகின்றனர். இந்த இணைப்பு அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதாக கூகுள் இந்தியாவின் தலைவர் ராஜன் ஆனந்தன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் 30 கோடி பேர் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்துகிறார்கள். தற்போது 4,100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இது இன்னும் சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ