Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிராய் மீது மொபைல் நிறுவனங்கள் வழக்கு!

 கால் டிராப் விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட டிராய் மீது மொபைல் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

செல்போனில் பேசும்போதே இணைப்பு துண்டிக்கப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து செல்போன் டவர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி இந்த பிரச்னையை சீரமைக்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டது.

அதுமட்டும் இல்லாமல் துண்டிக்கப்படும் அழைப்புகளுக்கு இழப்பீடாக ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ரூபாயை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நிறுவனங்கள்  தரவேண்டும் என்றும், அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 3 கால் டிராப்புகளுக்கு இழப்பீடு தரலாம் என்று டிராய் தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவு வரும் ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கால் டிராப் இழப்பீடு உத்தரவை எதிர்த்து இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம் மற்றும் இந்திய செல்லுலார்  நிறுவனங்கள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ