Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளத்தில் ஆவணங்கள் இழப்பா? வீட்டுக்கே வருகிறது KYC ஆவண விவரங்கள்..!

மிழகத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் வகையில் டீமேட் அறிக்கை மற்றும் KYC சார்ந்த ஆவணங்களை சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (சிடிஎஸ்எல்) அனுப்பி வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற கடலோர பகுதிகளில் பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக டீமேட் கணக்கு அறிக்கை, இன்ஷூரன்ஸ் பாலிசி, ஃபிக்ஸ்ட் டெபாசிட் மற்றும் KYC சார்ந்த ஆவணங்கள்  பாதிப்படைந்துள்ளன. 
 
 
இந்த நிலையில் சென்னை, கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் வசிக்கும் டீமேட் கணக்குதாரர்களுக்கு KYC சார்ந்த ஆவணங்கள் (அடையாள மற்றும் முகவரிச் சான்று) அனுப்பப்பட்டு வருவதாக சிடிஎஸ்எல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிடிஎஸ்எல் சென்னை மண்டல மேலாளர் வாசுதேவனிடம் கேட்டபோது, ''சென்னை, கடலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் முதலீட்டாளர்களின் கணக்கில் பங்குகளை வைத்து இருக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டீமேட் கணக்குதாரர்களுக்கு இலவசமாக டீமேட் அறிக்கை மற்றும் KYC சார்ந்த ஆவணங்கள் இன்று (11.12.12) முதல் தபாலில் அனுப்பி வருகிறோம். 
 
முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கு தொடங்கும்போது KYC-க்கு என்னென்ன ஆவணங்கள் வழங்கினார்களோ அந்தந்த ஆவணங்களின் நகல்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தபோது என்னென்ன பங்குகளை வைத்து இருந்தார்களோ அதனுடைய டீமேட் அறிக்கை அனைத்தும் இலவசமாக அனுப்பி வருகிறோம்.
 
இதில் முதலீட்டாளர்கள் கணக்கில் ஒரு பங்கு இருந்தால்கூட அவர்களுக்கும் KYC சார்ந்த ஆவணங்களின் நகல்களை அனுப்பி வருகிறோம். அனுப்பப்படும் ஆவணங்கள் முதலீட்டாளர்களுக்கு மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிடும்" என்றார் வாசுதேவன்.
 
இதன் மூலம் வெள்ளத்தால் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் என எந்த ஒரு ஆவணங்கள் பாதிப்படைந்து இருந்தாலோ அல்லது தொலைந்து இருந்தாலோ முதலீட்டாளர்கள் KYC சார்ந்த ஆவணங்களின் நகல்கள் மூலம் அந்த ஆவணங்களை புதிதாக பெற்றுக்கொள்ள உதவிகரமாக இருக்கும், கவலைப்படத் தேவையில்லை.
 
சோ.கார்த்திகேயன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ