Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் மெட்டல் & ஆயில்!

கமாடிட்டி டிரேடிங்
மெட்டல் & ஆயில்!

கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி விளக்குகிறார் .
கச்சா எண்ணெய்!
“ கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சுமார் 11 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் நடத்திய கூட்டத்தில் உற்பத்தி குறைப்பு இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதால், விலை மேலும் குறைய ஆரம்பித்தது. மேலும் ஒபெக் நாடுகளின் உறுப்பு நாடான ஈராக் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை வைத்தே இந்தியாவின் ஒருநாள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஈராக் ஒரு நாளைக்கு 4.3மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதிகவரத்து மற்றும் விலை குறைவு காரணமாகக் கச்சா எண்ணெய்யின் சந்தை புரோக்கர்களின் சந்தையாகவே உள்ளது. 2015 ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து 9 மாதங்களாகக் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இவற்றைத் தாண்டி வரும் டிசம்பர் 15,16 -ல் நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் மீட்டிங்கில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதால் டாலர் வலிமைபெற்று கச்சா எண்ணெய் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது. 
வரும் வாரத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை ரூ. 2475 - 2375 க்குள் வர்த்தகமாகும். “


தங்கம்!
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை சரிவிலே வர்த்தகமானது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1085 டாலரில் இருந்து 1069 டாலர் வரை விலை சரிந்தது. தங்கத்தின் விலை ஒரே நாளில் 10 டாலருக்கு மேல் விலை சரிந்துள்ளது. கடந்த 8 வாரங்களில் 7வது வரமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. மேலும் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தங்கத்தின் விலையானது ஒரு மாத அளவில் இல்லாத அளவுக்கு விலை குறைந்து வர்த்தகமானது.   வருகிற 15,16ம் தேதிகளில் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் 9 சதவிகித அளவுக்குத் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.  வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் ஆயிரம் டாலர் வரை சரியும் எனவும் கருத்து நிலவுகிறது. வட்டி விகித குறைப்பின் தாக்கம் கோல்டு இடிஎஃப்-யிலும் நிலவுகிறது. அதாவது 2008 செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு முதலீடு குறைந்துள்ளது. விலை இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்பினால் தங்கத்தின் நுகர்வு இந்தியாவில் குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சீனாவில் 2016 பிப்ரவரியில் புத்தாண்டு வர இருப்பதால் அங்குத் தங்கம் வாங்கும் ஆர்வம் சற்று உயர்ந்துள்ளது. வட்டி விகித உயர்வு குறித்த முடிவின் அடிப்படையில் தங்கத்தின் விலை இருக்கும். 

 

சப்போர்ட்- ரெசிஸ்டன்ஸ்

 

கமாடிட்டி

கான்ட்ராக்ட்

சப்போர்ட்1

சப்போர்ட் 2

ரெசிஸ்டன்ஸ் 1

ரெசிஸ்டன்ஸ் 2

தங்கம்

பிப்ரவரி 05ம் தேதி

25,144

24,969

25,621

25923

வெள்ளி

மார்ச் 4ம் தேதி

33,370

32,819

34,915

35,909

காப்பர்

பிப்ரவரி 29ம் தேதி

309.00

301.90

320.40

324.60

நிக்கல்

டிசம்பர் 31ம் தேதி

564.40

547.90

604.00

627.10

லெட்

டிசம்பர் 31ம் தேதி

112.30

109.90

116.10

117.50

கச்சா எண்ணெய்

டிசம்பர் 31ம் தேதி

2,356

2,274

2,590

2,742

இயற்கை எரிவாயு

டிசம்பர் 28ம் தேதி

129.30

125.00

141.70

149.80

 

அட்டவணை தகவல்கள்:குட்வில் கமாடிட்டி நிறுவனத்தால் வழங்கப்பட்டவை.


வெள்ளி!
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கடந்த வாரம் முழுவதும் சரிவிலே வர்த்தகமானது. அதாவது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.62 டாலரில் இருந்து 14.02 டாலர் வரை சரிந்துள்ளது. தங்கத்தின் விலை சரிந்த அளவுக்கு வெள்ளியின் விலை சரியவில்லை. வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், கடந்த ஒரு வருடத்தில் வெள்ளியின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. வட்டி விகிதம் உயர்வு வெள்ளியின் விலையை வெகுவாக பாதிக்காது. ஏனெனில் சீனாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தால் வெள்ளியின் பயன்படு அதிகரிக்கும். 

காப்பர்!
கடந்த செவ்வாய் கிழமை உலோக சந்தைகளுக்கு மீண்டும் ஒரு இருண்ட நாளாகும். இது கடந்த ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெரிய சுரங்கங்கள் விலை குறைவின் காரணமாக உற்பத்தியை குறைத்துக் கொண்டது, அதோடு காப்பரின் தேவையும் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் இரும்பு தாது பொருட்களை இறக்குமதி செய்வது கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 2015 நவம்பர் மாதம் வரை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. 2015 அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்தில் 8.8 சதவிகிதம் சரிந்துள்ளது. காப்பரின் உற்பத்தி அடுத்த வருடம் 350 மில்லியன் பவுண்டிலிருந்து 250 மில்லியன் பவுண்டாக குறைக்கப்படலாம். இது காப்பரின் விலை உயர்வுக்கு உதவும் என நம்பப்படுகிறது.

இரா.ரூபாவதி

அக்ரி கமாடிட்டி

இந்த வாரம் சென்னா விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார். 


சென்னா (Chana)
“சென்னா மட்டுமல்ல கடந்த வாரத்தில் பெரும்பாலும் அனைத்து அக்ரி கமாடிட்டி பொருட்களும் விலை குறைந்தே வர்த்தகமாகியுள்ளன. இதற்கு முக்கியச் சந்தைகளில் அவற்றிற்கான தேவையில் முன்னேற்றம் இல்லாததே காரணம். தீபாவளிக்கு முன்பு வரை சென்னா விலை சற்று ஏற்றத்தில் இருந்தது. தீபாவளிக்குப் பின் விலை குறைந்தது.

 


 

மேலும் பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய குழு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளின்படி பெருமளவிலான பருப்பு வகைகள் அவசர கால பயன்பாடுகளுக்காக 50 ஆயிரம் டன் நேரடியாக விவசாயிகளிடமிருந்தும், ஒரு லட்சம் டன் இந்திய உணவுப் பொருட்கள் அமைப்பிடமிருந்தும் வாங்கி இருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கிடங்குகளுக்கும், தரகர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்குமான இருப்பு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. இதை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே சென்னா உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை உயராமல் கட்டுக்குள் இருக்கிறது. 

ஒரு குவிண்டால் சென்னா ரூ. 4600 லிருந்து ரூ. 4900 என்ற அளவில் வர்த்தகமானது. மேலும் பருப்பு வகைகளின் விளைச்சல் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் குறைந்துள்ளது. கடந்த வருடம் 97.80 லட்சம் ஹெக்டேராக இருந்த பருப்பு வகைகளின் விளைச்சல் ஏரியா இந்த வருடம் 90.91 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 

இதனால் இனி வரும் நாட்களில் சென்னாவுக்கான தேவை அதிகரிக்கும்பட்சத்தில் மட்டுமே விலை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்பு உண்டு. தேவை அதிகரிக்காதபட்சத்தில் ரூ. 4800 லிருந்து ரூ.4680 வரை விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது”. 
 

அட்டவணை தகவல்கள் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டவை

ஜீரகம் (Jeera)
ஜீரகம் கடந்த வாரத்தில் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்கு வெளிநாடுகளில் ஜீரக ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாததும், உள்ளூரில் ஜீரகத்துக்கான தேவை குறைந்ததும் தான் காரணம். 

 


சமீபத்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் அறிக்கைப்படி ஜீரக ஏற்றுமதி கடந்த வருடம் 49000 டன்னாக இருந்தது ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 45 சதவிகிதம் குறைந்து 27000 டன்னாக உள்ளது. அரசு வேளாண் துறை தரப்பில் 2014-2015 (ஜூலை-ஜூன்)க்கான ஜீரக விளைச்சல் 599000 டன்னாகக் கணிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 514000 டன்னாக மட்டுமே இருந்தது. 

ஆனாலும், வேளாண்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, விளைச்சலுக்கு சாதகமான வானிலை இல்லாத காரணத்தினால் விளைச்சல் குறையும் என்று தெரிகிறது. சமீபத்திய சந்தை நிலவரத்தின்படி குஜராத்தில் ஜீரக விளைச்சல் ஏரியா கடந்த ஆண்டு 159800 ஹெக்டேராக இருந்தது தற்போது நவம்பர் 30-ம் தேதி சந்தை நிலவரப்படி, 127600 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதனால் ஓரளவுக்கு விலை சரிவு கட்டுக்குள் இருக்கும் என்று நம்பலாம். 


ஏலக்காய் (Cardamom)
கடந்த வாரத்தில் முக்கிய சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. மேலும் ஏலக்காய்க்கான தேவை குறைந்து காணப்பட்டதும் விலை குறைவுக்கு ஒரு காரணம். 

 


வேளாண்துறையின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த ஆண்டு (2014-15) ஏலக்காய் விளைச்சல் 22000 டன்னாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 21000 டன்னாக இருந்தது. 

கடந்த செவ்வாய் அன்று 117 டன் ஏலக்காய் இருப்பு, கிலோ குறைந்தபட்சமாக ரூ. 611-க்கும் அதிகபட்சமாக ரூ. 656-க்கும் ஏலத்தில் விடப்பட்டது. இது கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் குறைவு. 

சந்தையில் ஏலக்காய்க்கான தேவை குறைந்து காணப்படுவது தொடர்வதால் விலை மேலும் குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ