Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்!

சுந்தரம் பிஎன்பி பரிபா வீட்டுக் கடன் நிறுவனம் மழை வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வந்துள்ளது.


வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளை புனரமைக்கவும், பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ளவும்  ரூபாய் பத்து லட்சம் வரையிலான வீட்டுக் கடனை அறிவித்துள்ளது. இந்த கடன் 8.5 சதவிகித ஆண்டு வட்டியில்  கணக்கிடப்படும் என்று சுந்தரம் பிஎன்பி பரிபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு வீட்டுக்கடன் வழங்க பல்வேறு நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வருகின்றன. இந்த நிலையில் சுந்தரம் பிஎன்பி பரிபா வீட்டுக் கடன் நிறுவனம் 8.5 சதவிகித ஆண்டு வட்டியில் வீட்டுக்கடன் சலுகையை அறிவித்துள்ளது. இதுபோன்ற கடன்களுக்கு வழக்கமான வட்டி விகிதம் 9.7 சதவிகிதம் என்பது குறிப் பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ