Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில்துறை உற்பத்தி 9.8 சதவிகிதமாக உயர்வு!

நம் நாட்டின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு கடந்த அக்டோபரில் 9.8 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக கருதப்படும் உற்பத்தி துறையில் உற்பத்தி விகிதம் கடந்த அக்டோபரில் 10.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல், மின்துறை உற்பத்தி 9 சதவிகிதமாகவும், சுரங்க துறை உற்பத்தி 4.7 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளன.
பண்டிகை காலத்தையொட்டி கடந்த அக்டோபரில், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி விகிதம் அதிக அளவாக 42.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.

நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரில் -2.7 சதவிகிதமாகவும், 2015-ம் ஆண்டு செப்டம்பரில் 3.84 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த நிலையில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் கடந்த அக்டோபரில் தொழில்துறை உற்பத்திக் குறியீடு 9.8 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம்  வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ