Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோட்டார் வாகன வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை! யூனிவர்சல் சோம்போ வழங்குகிறது

சென்னை மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தனது மோட்டார் வாடிக்கையாளர்களுக்களுக்கு இலவச சேவையே வழங்க யூனிவர்சல் சோம்போ ஜிஐசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அலகாபாத் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கர்நாடகா வங்கி, தாபர் முதலீட்டுக் கழகம் மற்றும் சோம்போ ஜப்பான் நிப்பாங்கா ஆகியவற்றின் கூட்டு முனைவான யூனிவர்சல் சோம்போ பொதுக் காப்பீட்டு நிறுவனம், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் காப்பீட்டுக் கோரிக்கைகளைப் பதிவு செய்து, தீர்த்து வைக்கவும் வழிமுறைகளை எளிமைப்படுத்த பல்வேறு நடவடிகைகளையும் எடுத்து வருகிறது.

மதிப்பீட்டாளர்கள் அறிக்கை, வாகனம் வாங்கியதற்கான அத்தாட்சியாக விலை விவரப் பட்டியல், வாகனப் பதிவு சான்றிதழ் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வெள்ளம் காரணமாகச் சேதமடைந்த தங்கள் வாகனங்களை எந்தப் பழுது பார்க்கும் நிலையத்திலும் கொடுத்தும் சரி செய்து கொள்ள நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் காப்பீட்டுக் கோரிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 1800 200 5142  என்னும் இலவச தொலைபேசி எண்ணையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP