Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"மேக் இன் இந்தியா"-க்கு ஜப்பான் ரூ. 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! மோடி தகவல்

"மேக் இன் இந்தியா" திட்டதிற்காக ரூ.80,000 கோடி முதலீடு செய்ய  ஜப்பான்  திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் சுற்றுப்பயணமாக  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வருகை தந்துள்ளார். இன்று (12.12.12) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின் இந்தியா-ஜப்பான் வர்த்த தலைவர்கள் மாநாட்டில்  பிரதமர் மோடி பேசியதாவது:

"இந்தியாவிற்கு அதிவேக ரயில் மட்டுமல்ல, அதிவேக பொருளாதார வளர்ச்சியும் அவசியம். இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னணியிலும் ஜப்பானின் பங்கு உள்ளது. இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டம்  தற்போது ஜப்பானில் உள்ளது. முதல் முறையாக இந்தியாவில் இருந்து மாருதி சூசுகியின் கார்களை ஜப்பான் இறக்குமதி செய்யவுள்ளது. மேக் இந்தியா திட்டத்திற்காக ஜப்பான் 11-12 பில்லியன் டாலர்கள் (ரூ.80 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" இவ்வாறு மோடி பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close