Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிமென்ட் நிறுவனங்களின் ரூ. 6 ஆயிரம் கோடி அபராதம் ரத்து!

இந்தியா சிமென்ட்ஸ் உட்பட 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு விதித்த ரூ.6,316.59 கோடி அபராதத்தை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அம்புஜா சிமென்ட்ஸ், பினானி சிமென்ட்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல், இந்தியா சிமென்ட்ஸ், மெட்ராஸ் சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக், ஏசிசி, ஜேகே சிமென்ட்ஸ், லஃபார்ஜ் இந்தியா, ஜேபி அசோசியேட்ஸ் மற்றும் ஸ்ரீ சிமென்ட்ஸ் போன்ற 11 நிறுவனங்கள் கூட்டணி அமைத்து உற்பத்தியைக் குறைத்து, சந்தையில் சிமென்ட் விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இந்திய கட்டுமான நிறுவனர்கள் கூட்டமைப்பு நிறுவனங்களிடையே போட்டியை உறுதி செய்யும் ஆணையமான சிசிஐ-யிடம் புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த சிசிஐ, கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ரூ.6,316.59 கோடி அபராதம் விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, சந்தைப் போட்டி தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் சிசிஐ பிறப்பித்த உத்தரவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி சிமென்ட் நிறுவனங்களுக்கு விதித்த ரூ.6,316.59 கோடி அபராதத்தை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ